|
எண்ணத்தர்
கேள்விநல் வேள்வி
யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த வந்தணர் வாழுங்
கொச்சை வயமமர்ந் தாரே.
2 |
2434.
|
பாலை
யன்னவெண் ணீறு
பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத
மாமறை பாடுதன் மகிழ்வர்
வேலை மால்கட லோதம்
வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங்
கொச்சை வயமமர்ந் தாரே.
3 |
என்று சொல்லத் தக்கவருமாகிய
அந்தணர் வாழும் கொச்சை வயத்தில்
எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை
அணிந்த மர்பினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக்
கையில் ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர்.
கு-ரை:
சுண்ணத்தர் (திருநீற்றுப்) பொடியர். பூதக்கண்ணத்தர்
என்பதில், ணகரமெய் எதுகை நோக்கி விரிந்தது. பூதகணத்தையுடையவர்
என்பது பொருள். கேள்வி-சுருதி.
3.
பொ-ரை: வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ளமாகப்
பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரைமிசைச்
சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற
திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக்
காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர்.
கு-ரை:
பாலை அன்னவெண்நீறு:- பவளம்போல் மேனியிற் பால்
வெண்ணீறு மாலை-இரவு. கீதம். . . . பாடுதல் மகிழ்வர். (தி.4 ப.77 பா.3 ;
தி.6 ப.34 பா.8; தி.2 ப.43. பா5) மாமணி-உத்தமரத்நம், அழகிய முத்தும்
நீலமணியும் ஆம்.
|