2437.
|
மண்டு
கங்கையும் அரவும்
மல்கிய வளர்சடை தன்மேற்
றுண்ட வெண்பிறை யணிவர்
தொல்வரை வில்லது வாக
விண்ட தானவ ரரணம்
வெவ்வழ லெரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார்
கொச்சை வயமமர்ந் தாரே. 6 |
|
* * * * * * * 7 |
2438.
|
அன்ற
வானிழ லமர்ந்து
வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டில்
உண்பது பொருகட லிலங்கை |
கு-ரை:
பாரிடம்-பூதம். வையகம்-பூமியோர். இடவாகு பெயர்.
உழல்வார்-சுழல்வார். தடுமாறுவார். இடுபலிக்கு வையகத் தில் திரிவார்
எனலுமாம்.
6.
பொ-ரை: கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த
கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத்
துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு
பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு
செய்து, விடைமீது அருள் புரியும் கோலத்துடன் காட்சி தருபவர்.
கு-ரை:
மண்டு-மிக்குச்செல்லும், கங்கையும் பாம்பும் மல்கிய சடை,
வளர்சடை, துண்டப்பிறை, வெண்பிறை தானவர்-அசுரர்.
7. *
* * * * * *
8.
பொ-ரை: வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட
வீடுகளைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர்,
அக்காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர்.
இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை
மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர்.
|