பக்கம் எண் :

935

வென்றி வேந்தனை யொல்க
     வூன்றிய விரலினர் வான்றோய்
குன்ற மன்னபொன் மாடக்
     கொச்சை வயமமர்ந் தாரே.           8

2439.







சீர்கொண் மாமல ரானுஞ்
     செங்கண்மா லென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி
     எங்கும் உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கானீர்ப்
     பண்பினர் பான்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக்
     கொச்சை வயமமர்ந் தாரே.           9



     கு-ரை: அன்று அ ஆல் நிழல் என்று பிரிக்க. பொன்றினார்
தலை-இறந்த அயனார்தலை. வான்தோய் குன்றம் அன்னமாடம்.
பொன்மாடம். சீகாழியின் செல்வநெடுமாடம் சென்று சேணோங்கிய
சிறப்புணர்த்திற்று.

     9. பொ-ரை: பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய
உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க்
கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப்பமைந்த தாமரை மலர்
மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய
கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர்.

     கு-ரை: பார்கொள்விண் அழல்கால் நீர்ப்பண்பினர்-நிலம், வான், தீ,
வளி, புனல் என்னும் ஐம்பெரும் பூதத்தின் இயல்பை உடையவர்.

     “மண்ணிற்றிண்மை”, நீரில் இன்சுவை”, “தீயின் வெம்மை”, “காலின்
ஊக்கம்”, “வானிற்கலப்பு” இவற்றினைத் தோற்றியவன் இறைவனாதலின்,
அப்பண்புகள் அவனுடைமையல்லவோ? ‘எல்லாம் உன் உடைமையே’
(தாயுமானவர் பாடல்) பால்மொழி;-உமா தேவியார்.