பக்கம் எண் :

936

2440.







குண்டர் வண்டுவ ராடை
     போர்த்ததொர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு
     மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும்
     பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக்
     கொச்சை வயமமர்ந் தாரே.           10
2441.







கொந்த ணிபொழில் சூழ்ந்த
     கொச்சை வயநகர் மேய
அந்த ணன்அடி யேத்தும்
     அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய
     தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும்
     புகவலர் முனைகெட வினையே.        11


                    திருச்சிற்றம்பலம்

     10. பொ-ரை: குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர்
ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய
புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை.
அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற
கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும்
பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு
மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில்
எழுந்தருளியிருப்பவர்.

     கு-ரை: துவர்க்கு வண்மை அடையாதலின் அதனது துவர்
நிறத்தின் மிகுதி புலப்படும். பார்ப்பவர் கண்ணுக்கும் கருத்திற்கும்
முறையே தோற்றத்தாலும் நினைப்பாலும் வெறுப்பை விளைக்கும்
வண்டுவர் ஆடையில் ஊட்டப்பட்டது என்க. பேசிய பேச்சு
மெய்யல்லாதவை. பொய்ப்பேச்சு.

     11. பொ-ரை: கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய
பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய