பக்கம் எண் :

937

அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல
ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை
ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு
அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர்.

     கு-ரை: அந்தணன்-தோணியப்பர். ‘அறவாழி அந்தணன்’
‘அந்தணர் என்போர் அறவோர்’ ‘அந்தணர் நூல்’ என்பவற்றால்
திருவள்ளுவர் குறிக்கும் பொருளை உணர்க. அருமறை ஞானசம்பந்தன்:-
மறையின் அருமையும், அம்மறையால் எய்தும் ஞானமும், அந்தஞானத்தொடு
தமக்குள்ள சம்பந்தமும் உணர்த்திப் பெயர்க்காரணம் புலப்படுத்தியவாறு.
இத்திருப்பதிகம் சந்தம் நிறைந்தும் அழகுடையதாயும் உள்ள தமிழ் மாலை.
அழகு-சொல்லழகு. பொருளழகு, தொடையழகு, திருவருட்பொலிவு.
வினைகெடமுனை (முன்பு) புகவல்லவர் என்க.

        திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்

                திருப்பதிகம்

செய்யமலர்த் திசைமுகனுந் திகிரிதரித் தோனுந்
     தேடரிய திருவுருவைத் திருவிரல்முன் னிறுத்தி
ஐயனிவ னெனக்காட்டி யழுதமுத முண்டான்
     ஆணைநம தென்றபெரு மானையினி தளிக்க வையைநதிக் கெதிர்நடப்பக் கனல்குளிரக் கிடப்ப
     மாமுனிவர் தொழுதரற்றநான்மறையின்சிரத்தைப்
பையரவின் விடந்தீர்ப்பப் பனைபழுப்பப் பார்ப்ப
    பானாறுந் திருப்பதிகம் பதினாறா யிரமே.

            -ஸ்ரீ மாசிலாமணிதேசிக சுவாமிகள்.