பக்கம் எண் :

947

2454.

கூனி ளம்பிறை சூடிக்
     கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும்
     ஆடுவர் பூண்பது மரவம்
கான லங்கழி யோதங்
     கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத்
     திருமறைக் காடமர்ந் தாரே.        2
   
2455. நுண்ணி தாய்வெளி தாகி
     நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும்
     பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி
     சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார்
     கலிமறைக் காடமர்ந் தாரே.        3


     2. பொ-ரை: கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம்
கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட, தேனின் மணம்
கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள
ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட
புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர். அவர்
அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும்.

     கு-ரை: ஆனில் அம் கிளர்ஐந்து - (தி.2 ப.10 பா.5.) ‘நாயன்மார்
ஆனைந்தில் இரண்டுபேர் உரையார் நவையெனமற்று இரண்டொன்று
நயந்துளது ஆன்முலைக்கண்’ என்னும் ஞானபூசாவிதி 14ன் உரைக்கண்.
கோமயம் கோசலம் இரண்டும் ஆகா என்று இவை யிற்றில்பேர் ஐந்து
என்ற திருப்பாட்டுக்களில் அருளிச் செய்யாமல் அடக்கியருளிச்
செய்தார்கள். நின்ற நெய் பால் தயிருமாக அஞ்சையும் ஒரு பாத்திரத்திலே
கூட்டி உண்டாக்கிவைத்து என்று எழுதியிருத்தலை உணர்க. (தி.2 ப.60
பா.3; தி.5 ப.49 பா.10; தி.7 ப.5 பா.1)

     3. பொ-ரை: ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய
இறைவர், நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார்