2456.
|
ஏழை
வெண்குரு கயலே
யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண்
மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலி விலரே. 4 |
பினை உடையவர். இசைதரும்
யாழ் போல அடக்கமான இனிய
மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். தண்மையான
வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை
நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்டதோடு இளம் பிறையாகிய
முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார்.
கு-ரை:
மார்பில் அணியும் நூல் நுண்மையும் வெண்மையும்
உடையதாயிருத்தல் வேண்டும். அதுகொண்டு முதுகின்
அழுக்காற்றுவார்க்கு இது தெரியுமே? பண் + யாழ் = பண்ணியாழ்.
மாதர்பிறைக் கண்ணியான். (தி.4 ப.3 பா.1).
4.
பொ-ரை: அறியாமையை உடைய வெண் குருகு அயலே
விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப்
புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர்
இளமையையும், கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின்
கணவராவார். அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர்
வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர்.
கு-ரை:
வேதாரணியத்தில் ஏழைவெண்ணாரையானது தாழை
மடலைத் தனது நற்றுணைப்பேடை என்றுகருதித் தழுவுமென்க. (நாரை)
இது தாழை இதுபேடை எனப்பகுத்தறியும் அறிவு இல்லாமையால்
ஏழைநாரை என்றார்.
புல்குதல்-கூடுதல்.
மாழை-அழகு, இளமை. அடியின் நீழலே
சரணாநினைபவர் என்றதால், சிவனடியார்கள் சிந்தனைக் குரியது
சிவனடியே அன்றிப்பிறிதும் யாதும் இல்லை என்றுணரலாம். காதலால்
அவை இரண்டுமே செய்கருத்து உடையார்
|