2457.
|
அரவம்
வீக்கிய அரையும்
அதிர்கழல்
தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம்
பறைதர வருளுவர்
பதிதான்
மரவ நீடுயர் சோலை
மழலைவண் டியாழ்செயு
மறைக்காட்
டிரவு மெல்லியும் பகலும்
ஏத்துதல் குணமென
லாமே.
5 |
(திருநீலநக்கர் 5)
என்புழி அருச்சித்தல் பணிதல் என்று தொழிலால்
இரண்டாயினும் சிந்தையால் ஒன்றே ஆதல் உணர்க.
5.
பொ-ரை: பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும், ஒலிக்கின்ற
கழல் அணிந்த திருவடிகளையும், நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள்
நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி, குங்கும மரங்கள்
நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும்
திருமறைக்காடாகும். அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே
குணமாகும்.
கு-ரை:
வீக்கிய - கட்டிய அரை-திருவரை (-இடுப்பு), கழலடி.
அரையையும் அடியையும் பரவினால் பாவம் அழியும் வண்ணம்
அருள்செய்யும் பரசிவன். மரவம்-குங்குமமரம். இரவும் எல்லியும்
பகலும்-இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே (தி.5 ப.74 பா.9) எல்லியும்
பகலும் இசைவானவா சொல்லிடீர், (தி.5 ப.75 பா.6) எல்லியும் பகலும்
உள்ளே ஏகாந்தமாக ஏத்தும் (தி.4 ப.41 பா.3) எல்லியும் பகலும் பணியது
செய்வேன் (தி.7 ப.69 பா.7) இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார்
எம்மையும் ஆளுடையாரே (தி.7 ப.75 பா.8) என்பவற்றை ஆராய்ந்தால்
இரவுக்கும் பகலுக்கும் வேறாயது எல்லி என்று புலனாகும். ஆயின்,
அவ்விரண்டினும் வேறாய் நிற்பது அவ்விரண்டன் சந்தியேயன்றி வேறில்லை.
இரவொடு பகலும், பகலொடு இரவும் சந்திக்கும் இரண்டிலும் எல் (ஒளி)
இருப் பதால் எல்லி என்ற பெயர் பெற்றது.
எல்-ஒளி,
சூரியன், பகல். எல்லியை இரவென்னும் பொருளில்
வழங்குதல் பயினறு றுளது. எல்லியம் பகல்-ஒளி வீசும் பகற்பொழுது.
எல்லியம் பகல்-என்பது நல்ல பாடம்.
|