பக்கம் எண் :

950

2458.







பல்லி லோடுகை யேந்திப்
     பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும்
     அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம்
     புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத
     மாமறைக் காடது தானே.          6
2459.







நாகந் தான்கயி றாக
     நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர்
     படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே
     வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம்
     ஆக்குவித் தான்மறைக் காடே.     7


     6. பொ-ரை: பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப்
பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை
உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும். அதனையும்
அவரே அறிவார். எருதேறிவருவார். பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து
வரத்திரிவார். அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த
வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும்.

     கு-ரை: பல்இல்(லாத) ஓடு, பலிதேரும் வாழ்க்கை அல்லலை
ஆக்குவதேனும் அடிகளுக்கு அழகியது. அதனையும் அவரே அறிவார்.
புல்லம்-(புல்லைமேயும்) எருது. ‘புல்வாய்’ என மானைக் குறித்தல் காண்க.
உழிதர்வர்-உழிதருவர். (பா.10) பார்க்க. திரிவர். ‘உழிதருகால்’ (திருவாசகம்)
திரிதருவர்-திரிதர்வர், திரிதவர், ‘தேவர் என்றே இறுமாந்து என்னபாவம்
திரி்தவரே’ (ஷ)

     7. பொ-ரை: வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான
மந்தரமலை மத்தாகவும் கொண்டு, தலைவால் பாகங்களாகப் பகுத்துக்
கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது
கொடிய நஞ்சு வெளிப்பட, அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி