2460.
|
தக்கன்
வேள்வியைத் தகர்த்தோன்
தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை
யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால்
ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப்
பரிந்தவன் பதிமறைக் காடே. 8 |
|
|
2461.
|
விண்ட
மாமல ரோனும்
விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய
பரிசின னவனுறை பதிதான் |
ஓடியபோது அந்நஞ்சை
உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி
அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும்.
கு-ரை:
வரை-மந்தரமலை. தேவாசுரர் பாற்கடல் கடைந்த வரலாறு.
வெருவ-வாய்பிதற்றல். ஆகம்-மார்பு, உடம்பு, உடம்பாயின், உடம்பினுள்
என்றும், மார்பாயின் அதன்மேல் ஆதேயமான கழுத்தில் என்றும் கருதுக.
8. பொ-ரை:
தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது
ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன்
சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச,
பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய
அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக்
கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.
கு-ரை:
தனது பெருமையை ஓரான்:- தன் பெருமைதான் அறியாத்
தன்மையன் (திருவாசகம்) ஓரான்:- உணரான் என்பதன் மரூஉவாகும்.
நக்கு-சிரித்து. நடுநடுத்து-நடுநடுங்கி. பரிந்தவன்-இரங்கியவன்.
9. பொ-ரை:
விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும், விளங்கும்
ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும், முற்காலத்தும்
|