2463.
|
மையு லாம்பொழில்
சூழ்ந்த
மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான்
காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ்
சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும்
புகவலர் கொளவலர் புகழே. 11
|
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த
திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது
எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ்
பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர்
உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய்
விளங்குபவர்.
கு-ரை:
மை-மேகம். பொய்யில்வானவர்-அழியாத வீட்டுலகினர்.
திருஞானசம்பந்தர்
புராணம்
அன்பினுக்
களவு காணார்; ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்து நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார்; மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
-சேக்கிழார்.
|
|