பக்கம் எண் :

956

2467.








பண்ண வண்ணத்த ராகிப்
     பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய
     விரிபுக லூரரொர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும்
     பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான்
     வர்த்தமா னீச்சரத் தாரே.          4
2468.



ஈச னேறமர் கடவுள்
     இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர்
     பொலிவுடைப் பூம்புக லூரில்


     கு-ரை: கயம் - நீர்நிலை துணையல்-மாலை. ‘கொண்டு’ இரண்டனுள்.
ஒன்று துணையல் முதலியவற்றைக்கொண்டு என்றும் மற்றொன்று அடியை
உளங்கொண்டு என்றும்கொள்ள நின்றமை உணர்க. குறிப்பு அறிமுருகன்:-
முருக நாயனார் சிறப்புணர்த்திற்று. அவரது குறிப்பு அறியும் ஆற்றலை,
தமக்கு நண்பருமாம் பெருமை தந்த பிள்ளையாரே அறிவார். பூக்கள்
திறக்கும் அநுபவ மிகுதியால், அவற்றைக் கொள்ளும் சமயக் குறிப்பும் ஆம்.

     4. பொ-ரை: விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து
இறைவர், பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமானவரும், ஆகாய
வடிவினராய் விளங்குபவரும், பெண்ணொர் பாகமான வடிவினரும்,
ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினரு மானவர்.

     கு-ரை: பண்ண வண்ணத்தர்-பண்ணிசை மயமான சிவ பெருமான்.
‘ஏழிசையாய் இசைப்பயனாய்’. விண்ணவண்ணத்தர்-ஆகாச ரூபர். பாகம்
பெண்ணவண்ணத்தர்-அம்மையப்பர். அர்த்தநாரீச்சுரர். ஆண் இணை
பிணைந்தவண்ண வண்ணத்து எம்பெருமான் என்றது அறியத்தக்கது.

     5. பொ-ரை: அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள்
மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட
அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர்
எல்லோர்க்கும் தலைவர். விடையேறு உடையவர். இனிய அமுதம்
போன்றவர். எந்தை, எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர்.