|
மூசு
வண்டறை கொன்றை
முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார்
வர்த்தமா னீச்சரத் தாரே. 5 |
2469.
|
தளிரி
ளங்கொடி வளரத்
தண்கய மிரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக்
கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரு
மொளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார்
வர்த்தமா னீச்சரத் தாரே.
6 |
2470.
|
தென்சொல்
விஞ்சமர் வடசொற்
றிசைமொழி யெழினரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத்
தொழுதெழு தொல்புக லூரில் |
கு-ரை:
இதன் முதலடியோடு ஒத்தது முன் (தி.2 ப.90 பா.1.)
உணர்ந்தது. பூச-பூசுதற்கு. நீற்றர்-நீறுடையவர். பூச என்னும் எச்சம்
நீற்றர் என்னும் வினைக்குறிப்பில் உடையர் என்பதோடு முடிந்தது.
6. பொ-ரை:
குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும்
இளங்கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து
முழைகள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர்
சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை
சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர்.
கு-ரை:
இளமுழை-இளமான். உளர்-அசைகின்ற; சுழல்கின்ற.
தளிர்களையுடைய கொடி, இளங்கொடி. தண்கயம்-குளிர்ந்த நீர் நிலையில்
இரிய-சாய. சுனைமலரும் ஒளிதருஞ்சடை. சடைமுடி மேல் பிறை உடையார்.
7. பொ-ரை:
அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை
மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள்
|