|
அஞ்ச
னம்பிதிர்ந் தனைய
வலைகடல் கடையவன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர்
வர்த்தமா னீச்சரத் தாரே.
7 |
2471.
|
சாம
வேதமொர் கீத
மோதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார்
நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக்
கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே.
8 |
நீங்கப்பாடித் தொழும்
புகலூரில், அன்று அலைகடலைக் கடந்த போது, மை
பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத்தினராய்
விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர்.
கு-ரை: தென்சொல்-தமிழ். விஞ்சுதல்-மிகுதல்
வடசொல்-
ஆரியபாடை. திசைமொழி-ஏனைய மொழிகளினின்று தமிழில் வந்து
வழங்கும் சொற்கள். சிவதோத்திரம் பாடும் பாஷைகள் குறிக்கப்பட்டன.
நெஞ்சு இருள்- நெஞ்சிலுள்ள (அகத்து) இருள். எழில் நரம்பெடுத்தலாவது:-
இசை எழுச்சியையுடைய யாழ்நரம்பில் அமைத்துப் பாடுதல். அஞ்சனம்-மை.
நஞ்சுக்குவமை.
8. பொ-ரை: தண்மையான புகலூரில் விளங்கும்
வர்த்தமானீச்சரத்து
இறைவர். இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும்
உடையவர். நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர்.
காமதேவனை எரித்த கண்ணையுடையவர்.
கு-ரை: தசமுகன் (இராவணன்) சாமவேத
கீதம்பாடி நலம் உற்றான்.
நாமதேயம்-பெயராற் சுட்டப்படுவது. கண்ணார்-நெற்றிக் கண்ணினார்.
வாமதேவர்-பஞ்சப்பிரம மந்திரரூப மூர்த்திகளுள் ஒன்றாய் விளங்கும்
சிவபிரான். சதாசிவருடைய ஐந்துமுகத்தில் நான்காவது வாமதேவம்.
|