பக்கம் எண் :

959

2472. சீர ணங்குற நின்ற
     செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய
     நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறு முமையை
     யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார்
     வர்த்தமா னீச்சரத் தாரே.          9
   
2473. கையி லுண்டுழல் வாருங்
     கமழ்துவ ராடையி னால்தம்
செய்யைப் போர்த்துழல் வாரு
     முரைப்பன மெய்யென விரும்பேல்
மெய்யில் வாளைக ளோடு
     செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான்
     வர்த்தமா னீச்சரத் தாரே.          10


     9. பொ-ரை: வர்த்தமானீச்சரத்து இறைவர், சிறந்த தெய்வத் தன்மை
உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர்களாய்த் தம்முட்
செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே
தோன்றி நகை செய்தவர். உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள்
எதிரே யானையை உரித்தவர்.

     கு-ரை: அணங்கு-தெய்வம், அழகுமாம். செரு-இருவரும்,
சிவபிரானைக் காண்பேன் என்று சொல்லி நிகழ்த்திய போர். ‘அவனொடு
நாராயணனும் கருத்தழிய நம்பர் நகைசெய்தார்’. அஞ்சுவித்து-அஞ்சச்செய்து.
வாரணத்து உரி-யானைத்தோல்.

     10. பொ-ரை: வாளைமீன்களோடு கயல்கள் குதித்து
விளையாடும் வயல்களைக் கொண்ட புகலூரில் நீல கண்டராய் விளங்கும்
வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மமையானவை. கையில் உணவு
ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை
மெய்யெனக் கருதேல்.

     கு-ரை: ஆடையினால் தம் உடம்பைப் போர்த்து உழல்வார்