பதிக
வரலாறு:
திருஞானசம்பந்த
நாயனார், திருவாரூர், திருக்காயில், தேவூர்,
திருநெல்லிக்கா, திருக்கைச்சினம் ஆகிய தலங்களை வழிபட்டு
வந்தகாலத்தில், தெங்கூரை அணைந்து பரவிப் பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
பிந்தைக்காந்தாரம்
ப.தொ.எண்:
229 |
|
பதிக
எண்: 93 |
திருச்சிற்றம்பலம்
2475.
|
புரைசெய்
வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி
யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 1 |
2476.
|
சித்தந்
தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற்
கோளெயிற் றரவொடு பிறையன் |
1. பொ-ரை:
மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில்
வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும்
வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர். விண்ணவர் போற்றக் கடலில்
தோன்றிய நஞ்சினை உண்டவர். முப்புரம் எரித்தவர். இடுபலிக்கு உழல்பவர்.
கு-ரை:
ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி, இடுபலிக்கு உழல்பவர்
அமர்ந்தார் என்றார். தென்கு (தெங்கு) + ஊர் = தெங்கூர்.
2. பொ-ரை:
தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில்
வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், மனம் ஒன்றி நினைக்கும்
|