பக்கம் எண் :

962

பத்தர் தாம்பணிந் தேத்தும்
     பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.      2
2477.







அடையும் வல்வினை யகல
     அருள்பவ ரனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
     பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
     தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.      3


அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர். கொத்தாக விளங்கும்
சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர். பக்தர்கள் பணிந்தேத்தும்
பரம்பரர். நீரில் பதித்த விதை போன்றவர்.

     கு-ரை: தன் அடி சித்தம் நினைவார் வினை என்றியைக்க.
சித்தத்தில் நினைவார். செடிபடு-பாவத்தாலுண்டான. பிறையன் என்பது
சிவனென்னும் பெயரளவாய் நின்று, தீர்க்கும் எனுமெச்சத்தைக் கொண்டது.
கோள்-வலிமை, கொலை. புனல் பதித்த வித்தன்-நீரில் பதியச்செய்த
விதையானவன். (தி.6 ப.15 பா.2) (திருவாசகம் 253)

     3. பொ-ரை: அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில்
விளங்கும் பெருமானார், நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர்.
அனல்போன்ற மழுப்படையை உடையவர். புலித்தோல் உடுத்தவர்.
கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர்.

     கு-ரை: வினை அகல அருள்பவர். விடை எருதுக்கு அதன்
கழுத்தில் மணிகட்டுதல் உண்மையான். மணி அணிதிரு விடை எனப்பட்டது.
தறுகண்-கொடுமை; அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமை ‘தறுகணன்’ (நன்னூல்)
கண் என்பதன் முன் சில முதனிலைகள் சேர்ந்து வெவ்வேறு பொருள்
பயத்தலை-அலக்கண். புண்கண், இடுக்கண் (இடுஙப்குகண்) வன்கண்
முதலியவற்றிற் காண்க.