பக்கம் எண் :

963

2478.







பண்டு நான்செய்த வினைகள்
     பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
     குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி
     மதுவுண விதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     4
2479.







சுழித்த வார்புனற் கங்கை
     சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச்
     செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக்
     காமன துடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     5


      4. பொ-ரை: மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த
மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில்
விளங்கும் இறைவர், முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து
நல்நெறியையும் அருளையும் தருபவர். வானத்து இளம்பிறையைச் சூடியவர்.
கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர்.

      கு-ரை: பறைய - அழிய, பயப்பார். கொண்டல்-மேகம். வானிற்கு
அடை. குரைகடல்-முழங்கும் கடல். வண்டு . . . விண்ட பொழில்-இயற்கை
உணர்த்திற்று.

      5. பொ-ரை: திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த
இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால்
செற்றவர். அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக்
கையில் தரித்தவர். காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர்.

      கு-ரை: சுழித்த-சுழற்சியைச் செய்த, தெழித்து-கோபித்து,