2480.
|
தொல்லை
வல்வினை தீர்ப்பார்
சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும்
இறையவ ரிமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 6 |
2481,
|
நெறிகொள்
சிந்தைய ராகி
நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொண் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 7 |
சிறையணிபறவை கழித்த
வெண்டலை-பிரமகபாலம். அன்னப் பறவையான
காரணம் பற்றியது.
6. பொ-ரை:
திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர்,
பழவினை தீர்ப்பவர். சுடலைப் பொடி பூசியவர். திங்களை முடியில்சூடி
நின்று ஆடுபவர். இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரிபுரம்
எரித்த வில்லினர்.
கு-ரை:
தொல்லை வினை-பூர்வகர்மம், பிராரப்தம், சஞ்சிதம்
இரண்டும், சுவண்டர்:- சு=அண்டர் நல்லதேவர் எனவும் இடனில்லை
சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே (தி.7 பா.470.) என்பதுகொண்டு
முன்பொருத்தம் என்றேம். அது இங்குப் பொருந்தாது. எல்லி-
தண்ணொளியுடைய திங்கள். எல்-ஒளி. சில்லை-இழிவு. பாசக்கடற்குளே
வீழ்கின்றதே இழிவு. வில்லினார்-மேருமலையாகிய வில்லையுடையாவர்.
7. பொ-ரை:
வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில்
சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர்,
|