பக்கம் எண் :

965

2482.







எண்ணி லாவிறல் அரக்கன்
     எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக்
     கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி
     தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     8
2483.







தேடித் தானயன் மாலுந்
     திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப்
     படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர்
     அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     9


நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர்.
தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர்.
பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர்.

     கு-ரை: நெறி-திருநெறி. முறி-தளிர். முளைமதி-பிறை. வெறி-மணம்.

     8. பொ-ரை: விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும்
வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன்
கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம்
பொடியாய், அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர்.
தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர்.

     கு-ரை: எண்-கணக்கு. விறல்-வலிமை. கருத்தர் தலைவர்
வினைமுதல்வர். கண்ணி-கங்கை. பிறைக்கண்ணியுமாம். விண் உலாம்
பொழில்:- சோலையுயர்வு குறித்தது.

     9. பொ-ரை: திருத்தெங்கூரில், அயனும் மாலும் முறையே
திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர். பூதப்