பக்கம் எண் :

966

2484.







சடங்கொள் சீவரப் போர்வைச்
     சாக்கியர் சமணர்சொற் றவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
     ஏத்துமி னிருமருப் பொருகைக்
கடங்கொண் மால்களிற் றுரியர்
     கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     10
2485.



வெந்த நீற்றினர் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த
     காழியுண் ஞானசம் பந்தன்


படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு
அருள் செய்யும் வேடத்தினர்.

     கு-ரை: அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியினையும்
தேடித் தான்காணார். இணை-ஒத்தன (இரண்டும்) பாட. . . படையினார்:-பாட
என்னும் வினையெச்சம் படையை உடையவர். என்பதில் உள்ள உடையவர்
எனும் வினைக் குறிப்பைக் கொண்டது. ஆடவல்லர் வேடத்தார்-வேட்டுவக்
கோலத்தார்.

     10. பொ-ரை: திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான்
உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர்
சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினைகளைத்
தீர்த்தருள் புரிபவர். இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய
யானையின் தோலைப் போர்த்தியவர். கடல் கடைந்த போதெழுந்த விடம்
பொருந்திய கண்டத்தினர்.

     கு-ரை: சடம்-உடம்பு, பொய், இடம் கொள்-மாயையைப் பற்றுக்
கோடாகக் கொண்ட. இருமருப்பு-இரண்டு (பெருங்) கொம்பு. கடம்-மதநீர்.
களிற்றுரியர்-யானைத்தோலர், கனன்று-வெம்மை வீசி.

     11. பொ-ரை: வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங்
குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி