பக்கம் எண் :

969

2487.








எண்ணி லீரமு முடையா
     ரெத்தனை யோரிவ ரறங்கள்
கண்ணு மாயிர முடையார்
     கையுமொ ராயிர முடையார்
பெண்ணு மாயிர முடையார்
     பெருமையொ ராயிர முடையார்
வண்ண மாயிர முடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.        2
2488.



நொடியொ ராயிர முடையார்
     நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிர முடையார்
     வண்ணமு மாயிர முடையார்


     2. பொ-ரை: வாழ்கொளிபுத்தூர் இறைவர், எண்ணற்ற
வகைகளில் அன்பு காட்டுபவர். இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர்.
இவர் ஆயிரங்கண், கைகளை உடையவர். சக்தியின் அம்சமாகப் பலவற்றை
உடையவர். பெருமைகள் பல உடையவர். இவர் வண்ணமும்
பலவகைப்படுவனவாகும்.

     கு-ரை: எண் இல் ஈரம்-‘அளவுபடாததோர் அன்பு’ (தி.4 ப.3 பா.10.)
எண்ணில்-ஆராய்ந்தால் எனலுமாம். இவர் அறங்கள் எத்தனையோர் என்று
கொள்க. அறங்கள் எத்தனை? எத்தனை (யுடை)யோர்? இவர்
எத்தனையோர்?

     தனை-அளவு ஆயிரங்கண்ணர். ஆயிரங்கையர். பெண்ணும்
ஆயிரம் உடையார்:- சிவசக்தியை உடையது சிவம். சிவமும் சக்தியும்
உருவம் முதலியவை இல்லாத உயர்வின. அவற்றில் ஆண் பெண் என்ற
பேதம் இல்லை. ஆற்றலைப் பண்மையாயும் ஆற்றலுடையதை
ஆண்மையாயும் உருவகித்தமையால், உண்மையிற் பெண் என்றும் அஃது
ஆயிரம் என்றும் கொண்டு, நினைப்பென்னும் நெடுங்கிணற்றில் விழுதல்
பெரும்பாவமாகும். சிவசக்தியும் சிவமும், அவ்வச்சத்திகட்கு இடமாய
விந்துவும் முறையே பலவேறு வகையான் விருத்திப்பட்டும் நிற்கும்.
சிவஞான பாடியத்தில் சூ 2. அதி.2. காண்க.

     3. பொ-ரை: வாழ்கொளிபுத்தூர் இறைவர், நுட்பமான கால
அளவுகளாய் விளங்குபவர். மிகவும் நுண்மையானவர். அவர் பார்