|
முடியு
மாயிர முடையார்
மொய்குழ லாளையு முடையார்
வடிவு மாயிர முடையார்
வாழ்கொளி புத்தூ ருளாரே. 3 |
2489.
|
பஞ்சி
நுண்டுகி லன்ன
பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார்
கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார்
ஆனையி னீருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார்
வாழ்கொளி புத்தூ ருளாரே. 4 |
வையும் பலவேறு வகைப்பட்டவை.
பலவேறு வண்ணங்கள் கொண்டவர்.
பலவாய முடிகளை உடையவர், உமையம்மையை இடப்பாகமாகக்
கொண்டவர். பலவேறு வடிவங்கள் கொண்டவர்.
கு-ரை:
நுண்ணியர்:- ‘நோக்கரிய நோக்கே நுணுக்கரிய
நுண்ணுணர்வே’ திருவாசகம். 1 அடி: 76.
4. பொ-ரை:
வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை
உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர், பஞ்சினால்
இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர். சடைமுடியில்
ஆடையைத்தரித்தவர். பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு
அடையாளமாகக் கொண்டவர். ஐம்பொறிகளை வென்றவர்க்கு
அணிமையில் இருப்பவர். ஆனைத்தோல் போர்த்தவர்.
கு-ரை:
சேவடியின் மென்மை உணர்த்தப்பட்டது. குஞ்சி
மேகலையுடையார்:- சைவத் துறவியர் சடைமுடி மறைக்கும் கல்லாடையைக்
குறித்ததுபோலும். குஞ்சிமேற் கலையுடையார் என்றிருந்ததோ? மகளிர்
இடையில் அணிவது மேகலை. இங்குக் குஞ்சி (தலைமயிர்) மேல் உடையது
மேகலை என்று குறிக்கின்றது.
கொந்து-கோபம்.
(ஞானாமிர்தம்). அஞ்சும்வென்றவர்:- ‘பொறிவாயில்
ஐந்தவித்தார்’. இடைக்கு உவமை வஞ்சிக்கொடி.
|