2490.
|
பரவு
வாரையு முடையார்
பழித்திகழ் வாரையு முடையார்
விரவு வாரையு முடையார்
வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பது முடையார்
ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமு மாயிர முடையார்
வாழ்கொளி புத்தூ ருளாரே. 5
|
|
|
2491.
|
தண்டுந்
தாளமுங் குழலுந்
தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமு முடையார்
கோலமும் பலபலவுடையார்
கண்டு கோடலு மரியார்
காட்சியு மரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார்
வாழ்கொளி புத்தூ ருளாரே 6 |
5. பொ-ரை:
வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து
இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர். தம்மோடு அன்பு கலந்து
ஒன்றாகுபவரையும் உடையவர். பிரமனது வெள்ளிய தலையோட்டில்
பலிகொள்பவர். அரவம் பூண்டவர். ஆயிரம் பேருடையவர். வரங்கள் பல
அருள்பவர்.
கு-ரை:
விரவுவார்:- மெய்யன்புடைய அடியார் பரவுவார்
இமையோர்கள்... விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் திருவாசகம். 21.
விரவுதல். கலந்துநின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்
(திருவாசகம்.485) எனைக்கலந்து (84) கருணையினால் கலந்து
ஆண்டுகொண்ட விடையவனே (105).
6. பொ-ரை:
கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய
பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு, தாளம், குழல், தண்ணுமை
ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்.
பல்வேறு கோலங்கள் கொண்டவர். காணுதற்கும் காட்சிக்கும் அரியவர்.
|