பக்கம் எண் :

972

2492.







மான வாழ்க்கைய துடையார்
     மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார்
     தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடிடயார்
     நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கையை துடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.          7
2493.



ஏழு மூன்றுமொர் தலைகள்
     உடையவ னிடர்பட வடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி
     விருப்பவர் பலபல வுடையார்


     கு-ரை: தண்டு, தாளம், குழல், தண்ணுமைக்கருவி, பூதம், பல பல
கோலம், காட்சியருமை, கண்டு கொள்ளலருமை ஆகியவற்றை இறைவன்
உடையவன். தண்டு-வீணை. சிவிகை என்றும் பொருள் உண்டு. அஃது
இங்குப் பொருந்தாது. தாளம் முதலிய இன்னிசைக் கருவிகளாகிய
இனம்பற்றி வீணை என்பதே. ‘வேயுறு தோளிபங்கன் . . . . மிக நல்ல
வீணை தடவி’ (தி.2 ப.85 பா.1) கரந்தைப்பூவில் வண்டு வாழ்கின்ற
வளமுடையபதி. ‘செஞ்சடைசேர் கரந்தையான்’ (தி.1 ப.61 பா.3). அவர்
காட்சி கொடுப்பதும் அரிது; அவரைக் கண்டு கொள்வதும் அரிது
என்பதன் உண்மை அத்துவிதமாய் நின்றுணர்வோர்க்கே விளங்கும்.

     7. பொ-ரை: வாழ்கொளிபுத்தூர் இறைவர், பெருமை பொருந்திய
வாழ்க்கையர். தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர்.
அருட் கொடை வழங்கும் இயல்புடையவர். தவத்தோடு நாம் பரவ
ஞானவாழ்வு அருள்பவர். நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு
வாழ்வினை உடையவர்.

     கு-ரை: மலைந்தவர்-மாறுபட்ட (பகை)வர். தவத்தொடு
ஞானவாழ்க்கை உடையவர். புகழ்ந்து ஏத்தற்குரியது ஞான வாழ்வு ஒன்றே.
மற்றைய வாழ்வெலாம் இகழ்ந்து ஒதுக்கற் பாலன. நள்ளிருள் மகளிர் நின்று
ஏத்த வானவாழ்க்கைய துடையார். ‘அல்லிய . . . குழலார். . . பரவ. .
வல்லார்’ என்பதொடு பொருத்திக்காண்க.

     8. பொ-ரை: வாழ்கொளிபுத்தூர் இறைவர், பத்துத்தலைகளை
உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர். தக்கன் செய்த