பக்கம் எண் :

973

கேழல் வெண்பிறை யன்ன
     கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமு முடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.           8
2494.







வென்றி மாமல ரோனும்
     விரிகடற் றுயின்றவன் றானும்
என்று மேத்துகை யுடையார்
     இமையவர் துதிசெய விரும்பி
முன்றின் மாமலர் வாச
     முதுமதி தவழ்பொழிற் றில்லை
மன்றி லாடல துடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.           9


வேள்வியைச் செற்றவர். பலப்பல விருப்புடையவர். வெண்பிறை போன்ற
பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர். சாந்தம் அணிந்தவர்.

     கு-ரை: பத்துத் தலையுடையவன். வேழ்வி-வேள்வி. தக்கன் செய்த
யாகம். எதுகைநோக்கி ளகரம் ழகரமாயிற்று. விரும்பிச் செற்றதும் உடையார்
என்றும் அவர் பல பல விருப்புடையார் என்றும் இயைக்க. கேழல்-
பன்றிக்கொம்பு. ‘ஏனக்கொம்பு’ (தி.2 ப.102 பா.2) அன்ன-அவைபோல்வன;
(ஆமை, நாகம், தலையோடு முதலியன). மிடறு-திருக்கழுத்து.
சாந்தம்-சந்தனம்;பொறுமையுமாம். அட்ட புட்பத்துள் ஒன்று.

     9. பொ-ரை: வாழ்கொளிபுத்தூர் இறைவர், தாமரை மலர்
மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும்
நாள்தோறும் துதித்து வணங்கப் பெறுபவர். இமையவர் துதித்தலை
விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த }
தில்லைமன்றில் ஆடுபவர்.

     கு-ரை: ஏத்துகை-துதிக்கை; வினைத்தொகையும் ஆம். பா. 1. ஈகை,
பார்க்க. துதி (தோத்திரம்) புகழ்ச்சி மலர்வாசம் பொழில். மதி தவழ்
பொழில். ஆடலது-திருக்கூத்தாடுதலை.