2495.
|
மண்டை
கொண்டுழல் தேரர்
மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக்
கொள்ளன்மின்திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச்
சுண்ணவெண்பொடியணிந்தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த
வாழ்கொளி புத்தூ ருளாரே. 10 |
|
|
2496.
|
நலங்கொள்
பூம்பொழிற் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன்
வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை
ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி
நன்னெறி யெய்துவர் தாமே. 11
|
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும்
தேரர், அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும்
பேச்சுக்களைக் கொள்ளாதீர். ஒளிமிக்க பிறை சூடி, திருநீற்றுப் பொடி
பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப்
போற்றுவீராக.
கு-ரை:
பிறைக்கு அடை திகழொளியும் நன்மையும் துண்டமும்,
வெண்மையும், சுண்ணப்பொடி என்பதினும் சுண்ணமும் பொடியும் எனல்
சிறந்தது. சுண்ணம்:- திருப்பொற் சுண்ணம்.
11.
பொ-ரை: நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில்
தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண்மழுவை ஏந்தி
விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை
ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் நலந்தரும் சிந்தையராய்
நன்னெறி எய்துவர்.
கு-ரை:
நலம்-குறைவிலாமங்கலம். நன்னெறி சரியையாதியின்
பயனாகிய ஞானம்.
|