2498.
|
ஏறு
பேணிய தேறி
யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்தத னுரிவை
வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவ னும்பர்க்
கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி
அடிகளுக் கிடமர சிலியே. 2 |
2499.
|
கங்கை
நீர்சடை மேலே
கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாகம்
மருவிய கொல்லைவெள் ளேற்றன் |
அழுக்கு அடையும் ஆடைக்கு
மாசுணி என்ற பெயர் உள்ளமை அறிக.
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் (ஆசாரக்கோவை), வல்லியம்-தோல்
என்றிருந்து, லகரம் ளகரம் ஆகிய பிழைபோலும் வல்லியம்-புலி.
2.
பொ-ரை: விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும்
உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று
அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும்,
அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்குபவரும், தேவர்களால்
போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை
சூடிய சென்னியரும் ஆகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.
கு-ரை:
களிறு:- களிப்புடையது என்னுங் காரணப்பொருட்டாய், ஆண்
யானையைக் குறிப்பது. உரிவை-தோல், புலால் கலக்க மெய்யிற்போர்த்த
இனியன். யானையை உரித்துப் போர்த்தவன் இன்னாதவன் என்று
கொள்ளுதல் பொருந்தாமை உணர்த்த ஊறுதேனவன் (-சிறந்து அடியார்
சிந்தையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் இனியவன்)
என்றருளினார். ஆணவமல நாசஞ்செய்வதே யானையுரி வரலாற்றின்
தாற்பரியம். உம்பர்க்கு ஒருவன்-அமரரால் அமரப்படுவான். சுடர்-சிவம்.
ஒளி-சத்தி.
3.
பொ-ரை: வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல்
தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை
|