பக்கம் எண் :

977

சங்கை யாய்த்திரி யாமே
     தன்னடி யார்கருள் செய்து
அங்கை யாலன லேந்து
     அடிகளுக் கிடமர சிலியே.           3
2500.







மிக்க காலனை வீட்டி
     மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க வூரிடு பிச்சை
     யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில்
     தவளவெண் ணீறணிந் தாமை
அக்கி னாரமும் பூண்ட
     அடிகளுக் கிடமர சிலியே.           4


உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் ‘முல்லை’
நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது
போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல்
ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

     கு-ரை: கதம்-வேகம். வனம்-அழகு, சங்கை-சந்தேகம். அடியார்கள்
‘நமக்கு ஆண்டவன் அருள்வானோ அருளானோ’ என்னும் ஐயுறவுகொண்டு
திரிந்து, வீண்காலம் போக்கும் அவப்பொழுது நேராது சிவப்பொழுது
போக்குமாறு அவர்கட்கு அருள்வான் என்பது கருத்து. திரியாமே
அருள்செய்து அனல் ஏந்தும் அடிகள் என்க. எருதேறித் திரியும் இறைவன்
எனினும் அடியார்க்கு அருள்செய்யத் தவறான் என்றும். சங்கை-ஐயம்.
ஐயம்-பிச்சை. இரப்போர்க்கு இன்று நாம் இரப்பது சிறக்கக் கிடைக்குமோ
கிடைக்காதோ என்ற ஐயம் பற்றிய காரணப் பெயர். பிச்சைக்காரனாய்த்
திரியும் ஒன்றே செய்யாமல் அடியார்க் கருள்வதையும் செய்து என்றும்,
பிச்சையெடுத்தாலும் அடியார்க்கு அருளும் பெருஞ்செல்வன் என்றும்
கொள்ளும்பொருள் வலிந்து கொள்வனவேயாம்.

     4. பொ-ரை: அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை
அழித்துக் காமன் உடல் நீறாகும்படி விழித்து ஊரார் இடும் பிச்சையை
ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை,