பக்கம் எண் :

978

2501.







மானஞ் சும்மட நோக்கி
     மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாவரண் மூன்றுந்
     தழலெழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை
     யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி
     அடிகளுக் கிடமர சிலியே.           5


பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமையோடு,
என்புமாலை ஆகியவற்றைச் சூடிய வரும் சிவபிரானுக்கு உகந்த இடம்
திரு அரசிலியேயாகும்.

     கு-ரை: மிக்ககாலன்-இன்னான் இனியான் என்று கருதாது, உரிய
காலத்தில் கூறுபடுத்தும் அறத்தில் மேம்பட்ட தருமராசன். தக்கநூல்-
வேதாந்தம் என்னத் தக்க பூணூல், நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்’
(திருமந்திரம்). அக்கின் ஆரம்-எலும்புமாலை. இனமல்லாமையால்
ஆமையோடும் உருத்திராக்க மாலையும் எனல் ஒவ்வாது.

     5. பொ-ரை: மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய
மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வானவரும்
அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும்
திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

     கு-ரை: மான் அஞ்சும் மடநோக்கியாகிய மலைமகள், நோக்கி-
(கண்ணி) நோக்கத்தையுடையவள். மானினது கண்போன்றகண் என்னாது,
அக்கண்ணினது நோக்கம் போன்ற நோக்கம் எனல் முன்னோர் கருத்து,
மான்விழி’ என்பதும் மான் கண் என்பதும் ஒன்றாகா. விழிப்பது விழி.
கண்ணுவது கண்.

     விழித்தல்-இமைதிறத்தல். கண்ணுதல்-மனம் கருதல். இமை திறந்தும்
திறவாதும் கருதல் செய்யலாம். திறக்கக் கருதினாலன்றி இமைதிறத்தல்
நிகழாது. வான்-வானோர், அசுரர். ஓதி:- பெயர்.