பக்கம் எண் :

979

2502. பரிய மாசுணங் கயிறாப்
     பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப்
     பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக்
     கலங்கிய வவர்தமைக் கண்டு
அரிய வாரமு தாக்கும்
     அடிகளுக் கிடமர சிலியே.           6
         * * * * * * *                  7
2503. வண்ண மால்வரை தன்னை
     மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
     நெரிதரக் கால்விர லூன்றிப்


     6. பொ-ரை: அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய
பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப்
பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான
ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி
அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக்
காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

     கு-ரை: பரிய-பெரிய. அரிய அமுது எனலே அமையும். ‘அரிய
ஆரமுது’ என்றது பெரிய பேராசிரியர் (மகாமகோபாத்தியார்)என்ற
(ஆன்மாக்களின் அகங்காரத்தை வளர்க்கும்) பட்டப்பெயர் போல்வது.
ஆருயிர்-காருடல் என்பனபோல ஆரமுதும் பண்புத்தொகை. அரிய:-
நஞ்சு அமுது ஆதல் முன் இன்மை குறித்தது. ஆர்-முன் இல்லாத அஃது
இப்பொழுது (அமுதாக்கிய சமயம்) விளங்குதலைக் குறித்தது. அருமை-
இன்மை, விளக்கம்.

     7. * * * * * * * * * * *

     8. பொ-ரை: அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட
முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும்
வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி