பக்கம் எண் :

980

பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
     பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
     அடிகளுக் கிடமர சிலியே.           8
2504.







குறிய மாணுரு வாகிக்
     குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
     விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
     தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
     அடிகளுக் கிடமர சிலியே.           9


அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய
பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு
அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

     கு-ரை: வண்ணமால்வரை-கயிலைமலை. மறித்திடல்-கீழ்
மேலாக்குதல். கண், தோள், வாய் நெரிய என்க. கைந்நரம்பு-இராவணன்
கையிலிருந்த யாழ். பண்ணின் பாடல் நரம்புக்கு அடை பாடிய
பாடல்-அந்நரம்பாற் பாடிய பாடல். அண்ணலாய்-நாளும் வாளும் அருளிய
பெருமையிற் சிறந்தவனாகி; இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும்
பெருமையனாகி.

     9. பொ-ரை: குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின்
பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை
மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய
முடியாதவாறும் அறியமுடியாதவாறும்அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த
திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு
அரசிலியேயாகும்.

     கு-ரை: குறிய மாணுரு-வாமனாவதாரம் ‘குறுமாணுருவன்’ (தி.1 ப.101.
பா.5.) வெறி-மணம். மெய்த்தவத்தோன்-பிரமன். செறிவு ஒணா-செறிதல்
ஒன்றா. செறிதல்-பொருந்துதல்.