பக்கம் எண் :

981

2505.







குருளை யெய்திய மடவார்
     நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந்
     தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம்
     நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும்
     அடிகளுக் கிடமர சிலியே.           10


அறிவொணாவுருவம்-ஐம்பொறிகளாலும், மனாதியாலும், ஜீவபோதத்தாலும்
அறிதல் ஒன்றாத ஞானசொரூபம்.

     ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம் பானப்
பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாதநீழற் கீழ்’ நின்று
அயிப்படும் திருவுருவம் அது. ‘அறிவினில் அருளான் மன்னி’ (சித்தியார்).

     10. பொ-ரை: இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடிவாழாது
தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டைகளைக் கையில்
இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும்
அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க
பொருளானவரும், பொய்மையில்லாதவரும் உண்மையின் வடிவானரும், தம்
பொன்னடிகளை வணங்குவார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய
சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி
வழிபடுங்கள்.

     கு-ரை: உண்பவர்-சமணர். சொல்லிய-சொன்னதம் சமயக்
கொள்கைகளை. வினையாலணையும் பெயர். பொருள்’ உயரபொருள்
(தி.7 ப.86 பா.5) ‘பல்கலைப் பொருள்’ (தி.7 ப.69 பா.10) ‘மெய்ப்பொருள்’
(தி.4 ப.74 பா.9) ‘கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள்
பொருளலவே’ (தி.2 ப.41 பா.7) என்றதால் ஆன்மாக்களுக்குப் பொருளாவது
சிவபரம் பொருளே என்றறிக.குருளை என்பது ஈண்டு இளமையைக்
குறித்தது. இளமகளிரை வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருந்தும், தலை
மயிரைப் பறித்து விடுவது பொருத்தமாகாமையை உணர்த்துவதுடன்,
அதற்கு
ஏதுவாவது அமிதபோஜனப்ரியம் என்றுங் குறித்தார்.