2508.
|
தேவர்
தானவர் பரந்து
திண்வரை மால்கட னிறுவி
நாவ தாலமிர் துண்ண
நயந்தவ ரிரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்ச
முண்டவ னமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த
கடிபொழில் காழிநன் னகரே. 2 |
2509.
|
கரியின்
மாமுக முடைய
கணபதி தாதைபல் பூதந்
திரிய வில்பலிக் கேகுஞ்
செழுஞ்சுடர் சேர் தரு மூதூர்
சரியின் முன்கைநன் மாதர்
சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும்
ஒலிபுனற் காழிநன் னகரே. 3 |
2.
பொ-ரை: தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர்தம்
பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக்
கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி
ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர்களைக்
காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த
மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான
சீகாழி நன்னகர் ஆகும்.
கு-ரை:
நிறுவி-மத்தாக நிறுத்தி, நாவதால்-நாக்கால்; அது பகுதிப்
பொருள்விகுதி. இரிந்திட-சாய. ஆவ என்று-ஆஆ என்று இரங்கி,
இத்தொடர் திருமுறைகளில் பயின்றுள்ளதை ஆங்காங்கு நோக்குக. காவல்
ஆர் மதில்சூழ்ந்த நகர்; பொழிலையுடைய காழி நகர்.
3.
பொ-ரை: யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும்,
பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத்
திரிபவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந்தருளிய
மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய
|