2510.
|
சங்க
வெண்குழைச் செவியன்
தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய
வப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த
தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு
மணிபொழில் காழிநன் னகரே. 4 |
அழகிய மகளிர் காலில்
தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை
ஆடிக்கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல்
சூழ்ந்த காழி நகராகும்.
கு-ரை:
கரத்தை உடையது கரி எனப்பட்டது. பூதகணங்களோடு
பலிக்கு ஏகினார் எனல் அறிக. செழுஞ்சுடர்:- அழியாததும் அறியும்
ஆன்மாக்களிடத்தில் வளர்வதுமாகிய ஒளி-செழுஞ்சுடரே செழுஞ்சுடர்
நற்சோதி மிக்கவுருவே அப்பர். ஒளிவளர் விளக்கே (திருவிசைப்பா).
சரி-வளையல். சதிபட மாநடம் ஆடல். தண்ணுமை விளங்கலுறு தாளம்
இசையெல்லாம் வண்ணமலர்மெல்லடி வழிச்சதியில் நிற்பக் கண்ணிணை
கொள்பல்வளைய கைவழி நடப்ப, (பிரபுலிங்க. மாயை பூசைகதி 52).
நடித்தல். செப்பமைந்த தண்ணுமையிசை தாளம் மென்சிறுதாட் டுப்பமைந்த
வொண்சதிதழீ இச்சுவைய பல்காய முப்பமைந்தவின் கறியென நடித்தல்.
(பிரபு. கைலாச 31). உரியநாமங்கள் ஓதி என்றதால், அக்காலத்து
மகளிர்க்குச் சிவநாமம் ஓதும் உரிமையை ஆசிரியர் உணர்ந்து மகிழ்ந்து
பாட்டிலும் நாட்டிய உண்மை புலப்படும்.
இக்கால
மகளிர் பலர், இறைவனை ஏத்த உரியநாமங்களை
உணராமைக்குக் காரணத்தை ஆராய்ந்து கண்டு, போக்குதல், சமய
வளர்ச்சிக்கு வழி கோலுவதாம். மகளிரே சமயம் வளர்க்கத்தக்கார்.
4.
பொ-ரை: சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண்மதி
சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த
தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்குவது, உயர்வான
மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதிகள் வானத்தில்
சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும்
அணி பொழில் காழி நன்னகராகும்.
|