2511.
|
மங்கை
கூறமர் மெய்யான்
மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார்
இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் னியமந்
தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி
மறையவர் காழிநன் னகரே. 5 |
கு-ரை:
அங்கம்-எலும்பு. துங்கம்-உயர்ச்சி. தொகு கொடி-தொக்க
கொடிகள். வினைத்தொகை.
மிடைந்து-நெருங்கி.
வங்கமதி-வெள்ளியைப் போன்றதிங்கள்.
5.
பொ-ரை: உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு
மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று
எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள்
ஆகியவற்றைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம்
இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு
வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும்.
கு-ரை:
உண்மை வடிவானவன் என்பது பொருந்துமேல் கொள்க.
எழுவார்:- விழித்து எழுதல், மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி
வழியாகத் தியானித்து எழுதல். இடர்வினை. இரண்டன் உருபும் பயனும்
உடன் தொக்க தொகையாயும் உம்மைத் தொகையாயும் கொள்ளலாம்.
வினைகொடுப்பவன்-வினைகளைப்
போக்கிப் பிறவியை ஒழித்துப்
பேரின்பம் அருளும் சிவபெருமான். சங்கை-ஐயம். தகுதி-ஒழுக்கத்தால்
உயர்தல் மிக்கமறையவர். கீர்த்தியை உடைய மறையவர். உயர்கீர்த்தி
வினைத்தொகை.
கங்கைநாடு:-
கங்காநதி பாயும் நாட்டினின்றும் வந்த மறையவர்
என்றேனும் அந்நாடு வரையிலும் பரவிய கீர்த்தியை யுடையமறையவர்
என்றேனும் கொள்க.
|