2514.
|
கார்கொண்
மேனியவ் வரக்கன்
றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொண் மங்கையு மஞ்ச
வெழின்மலை யெடுத்தவ னெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலாற்
செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த
தண்வயல் காழிநன் னகரே. 8 |
2515.
|
மாலு
மாமல ரானும்
மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய
பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் |
கு-ரை:
நடமது - திருக்கூத்து, நடனமாகியமது எனக்
கொண்டுரைத்தலுமாம். ஆனந்த நடனம் என்பதை நடமது எனப்பொருந்தும்
மதுவை உண்டு அடையும் இன்பத்தை மது எனலாம். ஆனந்தத்தைக்
குறிக்க அச்சொல்லை ஆள்வது பொருந்தும். நந்தி மத்தளம் வாசிக்க
நடமாடினார் என்னும் வரலாறு இதில் குறிக்கப் பட்டது. ஒருகாலம்
அறம்விரித்து உரைத்தவற்கு என்பதில் சநகாதி யார்க்குக் கல்லாலின் கீழ்
இருந்து உபதேசித்த உண்மை குறிக்கப் பட்டது. இடம்-பரப்பு.
வேதப்பொருளின் விரிவைக் குறித்தது. இருந்தவர்-பெருந் தவத்தோர்.
8.
பொ-ரை: கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப்
பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை
மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த
ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில்
பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும்
தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும்.
கு-ரை:
ஏர் கொள்மங்கை-அழகுடைய உமாதேவியார் எழில் மலை-
அழகிய கயிலை, உயர்ச்சியைக் குறித்த எழுச்சியுமாம். தார்-பூ.
9.
பொ-ரை: திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர்
என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது
|