|
சேலும்
வாளையுங் கயலுஞ்
செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள்
அணிவயற் காழிநன் னகரே.
9 |
2516.
|
புத்தர்
பொய்மிகு சமணர்
பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத்
திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர்
செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று
முறைமைசெய் காழிநன் னகரே. 10 |
பக்கத்தையும் காண
மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுடராகிய
சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து
வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை
உடைய காழி நன்னகராகும்.
கு-ரை:
பாலும் காண்பு அரிதாய பரஞ்சுடர்-தனது பக்கத்தையும்
காண்டற்கு எளிதல்லாத மெய்யொளி சேல், வாளை, கயல் என்பன
வெவ்வேறு வகைமீன்களாதலை அறியாமல் எழுதியுள்ள இடம் பல உள.
ஆலும்சாலி-ஆடுகின்ற நெல்.
10. பொ-ரை: அழகிய கழலணிந்த திருவடிகளைக்
காணும் மனமற்ற
பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற
நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறையோடு செறிந்த
நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து முத்தனே அருள் என வேண்டி
நிற்கும் காழி நன்னகராகும்.
கு-ரை: பொய்மிகு என்பது
இடைநிலை விளக்கு. பொலி கழல்
இணைகாணும் சித்தம் அற்றவர்க்கு-பொன்போல் ஒளிசெய்யும் கழல்
அணிந்த இரண்டு திருவடிகளையும் உணரும் உள்ளம் ஒழிந்த
அப்புத்தர்க்கும் சமணர்க்கும் இல்லாமை-பெறுதல் இல்லாதபடி, திகழ்ந்த
நல் செழுஞ்சுடர்க்கு-சிவனடியார்க்கு விளங்கிய நல்ல செழித்த ஒளியாகிய
சிவபிரானுக்கு. சித்தரோடு அமரர் மலர்கொண்டு
|