திருஞானசம்பந்தர்
பிள்ளைத்தமிழ்
செங்கீரைப்
பருவம்.
கோலொன்று
கொண்டகில வலயம் புரக்கவரு
கோமாறன் மேவியதமிழ்க்
கூடலிற் சமண்மூகர் திருமடத்திட்டவெரி
கொற்றவற் பற்ற மொழியா
மாலொன்று மங்கையர்க் கரசியார் படுதுயரின்
வலிகண்டு சென்றுதவிரா
வஞ்சப் பெருங்கூனும் வெப்புந் தவிர்த்தருளு
மதுரவா சகமதகுபாய்
காலொன்று மாநதி பரந்துவரு கழனியிற்
களையெனக் குவளைகளைவார்
கண்டுவெரு வித்தங்கள் கைநெரித் தருகுமிடை
கன்னலங் காடுமறையச்
சேலொன்றி விளையாடு சீகாழி நாடாளி
செங்கீரை யாடி யருளே
செழுநான் மறைத்தலைவ திருஞான சம்பந்த
செங்கீரை யாடியருளே.
-ஸ்ரீ
மாசிலமணி தேசிக சுவாமிகள்.
|