பதிக வரலாறு:
137ஆவது பதிகத் தலைப்பிற் காண்க. திருவிராகம்
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
233
|
|
பதிக
எண்: 97 |
திருச்சிற்றம்பலம்
2518.
|
நம்பொருள்
நம்மக்களென்று
நச்சியிச்சை செய்துநீர்
அம்பர மடைந்துசால
அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தமன்
ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர்
நலங்கொள்காழி சேர்மினே. 1 |
2519.
|
பாவமேவு
முள்ளமோடு
பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ
தன்முனம்மி சைந்துநீர் |
1.
பொ-ரை: நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர்
அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன்,
ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய
அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
கு-ரை:
பொருட்பற்றாலும் மக்கட் பற்றாலும், லோகாந்தரம் சேர்ந்து,
துன்பம் அடைதற்கு முன்னமே சீகாழியைச் சேருங்கள் நீங்கள் என்று
உபதேசம் புரிந்தருள்வதை உணர்க. அம்பரம் அடைதல்;- நாதனார்
ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் போய்ச் சேர்தல்.
2.
பொ-ரை: பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறைவனிடம்
பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர்
சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம்
|