|
தீவமாலை
தூபமுஞ்
செறிந்தகைய ராகிநம்
தேவதேவன் மன்னுமூர்
திருந்துகாழி சேர்மினே. 2 |
2520.
|
சோறுகூறை
யின்றியே
துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்ற மெள்கவே
இடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான்
ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில்
நலங்கொள்காழி சேர்மினே. 3 |
முதலியன ஏந்திய கையராகித்
தேவர் தலைவனாகிய அவ் விறைவன்
எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக.
கு-ரை:
நல்வினை தீவினை என்பன கன்மங்கள். அவை
ஆகாமியவினை அவ்விரண்டும் அறமும் மறமும் ஆகும் நிலைமையில்
சஞ்சிதம் எனப்படும். அறம்-புண்ணியம், மறம்-பாபம் அப்புண்ணிய பாவம்
இரண்டும் அநுபவத்திற்கு வந்து சுக துக்கங்களை ஆக்கும், அப்போது
அவ்விரண்டும் பிராரப்தம் எனப்படும். புண்ணியம் பசுபுண்ணியம்,
சிவபுண்ணியம் என இருவகைப்படும். அவற்றுள் ஈண்டுச் சிவபுண்ணியத்துள்
அடங்கும் சிவபூஜையைக் கருதவேண்டும். புண்ணியஞ் செய்வார்க்குப்
பூவுண்டு நீருண்டு என்பது திருமந்திரம். அப்புண்ணியத்தைச் செய்க என
விதிப்பாராய், நீர், தீபம், மாலை, தூபம் என்பவை செறிதல் வேண்டும்
என்றருளினார். நீர் என்பது முன்னிலைப் பெயராயினும்
பொருத்தமாயிருத்தலின் வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகவும்
கருதப்பட்டது.
3.
பொ-ரை: உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற
சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய
சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான்
உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப்
பதியை அடைவீர்களாக.
கு-ரை:
இடுக்கண் என்பது மரூஉ. அலக்கண், தறுகண், வன்கண்,
புன்கண் முதலியவை உள்ளேயுற்ற நிலையை வெளியே
|