பக்கம் எண் :

1014திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

82. திருஅவளிவணல்லூர்

பதிகவரலாறு:

     மதுர முத்தமிழ் வாசகர் திருக்கருகாவூர்ச் சந்தமாமறை தந்தவர்
கழலிணையைத் தாழ்ந்து, சிந்தையின்புறப் பாடி, அவளிவணல்லூர்
அணைந்து, தம் பரிசுடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி
இறைஞ்சிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்: 340 பதிக எண்: 82

 திருச்சிற்றம்பலம்

3679. கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி
       நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட
     வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில்
     கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ
     தவளிவண லூரே.                     1


     1. பொ-ரை: இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை
அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர்.
இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி,
இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக்
கொண்டு அம்பு எய்து எரித்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம்
திரு அவளிவணல்லூர் ஆகும்.

     கு-ரை: கொம்பு - பூங்கொம்பு. இரிய - தம்மைப் பிரியும்படி. (தாமும்
பிரிந்து வந்து வண்டு) உலவு - திரிகின்ற. கொன்றை - கொன்றைமாலை.
புரிநூலொடு - பூணூலொடு. குலாவி - மார்பின்கண் பூண்டு. தம் பரிசினோடு
- தம் பரிசுடையாரென்னும் தன்மையோடு. நீறு தட வந்து - திருநீறு பூசி.
இடபம் ஏறி, கல் - மேருமலை. வரை - தாம் வரைந்து கொண்டவில் ஆக,
(மதில் எய்த