பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)82. திருஅவள் இவள்நல்லூர்1015

3680. ஓமையன கள்ளியன வாகையன
       கூகைமுர லோசை
ஈமமெரி சூழ்சுடலை வாசமுது
     காடுநட மாடித்
தூய்மையுடை யக்கொடர வம்விரவி
     மிக்கொளிது லங்க
ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ
     தவளிவண லூரே.                     2


பெருமான்) கம் - ஆகாயத்தின்கண். பருத்த. செம்பொன், (வெள்ளி, இரும்பு
இவற்றால்) ஆகிய. நெடும்மாடம் - நெடிய மாடங்களையுடைய. மதில் -
திரிபுரங்கள், எரிய அம்பு எய்தபெருமான் உறைவது அவளிவணல்லூரே.
செம்பொன் - எனவே. வெண்பொன், கரும்பொன்னும் உபலக் கணத்தாற்
பெற்றாம், தேனுக்காகக் கொன்றை மரம் சென்று, பூக்கள் பறிக்கப்பட்டு
மாலையாகச் சிவபெருமான் மார்பிற் கிடத்தலால், வறுங் கொம்பைப் பிரிந்த
வண்டு, அம்மாலையிற் சுற்றித் திரிகின்ற மார்பினன் என்பது கொம்பு......
கொன்றை" என்றதன் கருத்து. அது கொண்டு கருதின் 'தமக்கு இன்பம்
கிடைக்குமென்று உலகப் பொருளிற் சென்ற மனம், திரும்பிச் சிவபெருமானை
யடையின் பல்வகை இன்பங்களும் பெறலாமென்று உலாவும்' - எனவும் ஓர்
பொருள்தொனிக்கின்றது. பல்வகை இன்பமும் சிவன் அருளுவன் என்பதை,

"அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
     யன்பொடு தன்னையஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்துள்ளமள் ளூறுந்
     தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
     பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
     கொண்டசோ ளேச்சரத் தானே."

என்னும் திருவிசைப்பா(தி.9)வால் அறிக. தம் பரிசுடையார் என்பது தலத்து
இறைவன் திருப்பெயர்.

     2, பொ-ரை: ஓமை, கள்ளி, வாகை முதலிய மரங்கள்
நிறைந்ததும், கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி