3681. |
நீறுடைய
மார்பிலிம வான்மகளொர் |
|
பாகநிலை
செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ
காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவி
னின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னானுறைவ
தவளிவண லூரே. 3 |
நெருப்புச் சூழ்ந்த
சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர்
சிவபெருமான். தூய்மையான எலும்பும், பாம்பும் கலந்து ஒளி துலங்க,
ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஓமை கள்ளி, வாகை இம்மரங்களையுடையவனாகிய
இடங்களும், கூகை முரல் ஓசை - கோட்டான்கள் கத்தும் ஓசையும். ஈமம் -
கொள்ளிகளும். எரி - நெருப்பும். சூழ் - சூழ்ந்த - சுடலையாகிய, (வாசம் -
தாம் வாசஞ்செய்யும்). முதுகாட்டில் நடம் ஆடி. தூய்மையுடைய அக்கொடு
- அக்குப்பாசியோடு அரவம் - பாம்பும். (விரவி) கலந்து ஒளிமிக்கு. துளங்க
- விளங்க. ஆமை யோட்டோடு பூணும், அடிகள் உறைவது வளிவள்நல்லூரே.
துளங்க - துலங்க. லள ஒற்றுமை - அசைய எனினுமாம். சுடலையாகிய
முதுகாடு இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வாசம் - இடைப்பிறவரல்.
3.
பொ-ரை: சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான்
மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும்
அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சுடுகாட்டில் இரவில்
நடனம் ஆடுபவர். கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
இமவான் மகள் - உமாதேவியாரை. ஓர்பாகம், நிலைசெய்து
- பிரியாமற்கொண்டு, கூறுடைய வேடமொடுகூடி அழகாயதொரு கோலம் -
ஒருபாதி ஆணாகிய தோற்றத்தோடு கூடி அழகாகியகோலம். ஏறு -
எவற்றினும் சிறக்க உடைய (வ) ரேனும். இடுகாடு - இடுகாட்டில், (இரவில்
நின்று நடம் ஆடும். ஆறு உடைய)
|