3682. |
பிணியுமிலர்
கேடுமிலர் தோற்றமில |
|
ரென்றுலகு
பேணிப்
பணியுமடி யார்களன பாவமற
வின்னருள்ப யந்து
துணியுடைய தோலுமுடை கோவணமு
நாகமுட றொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ
தவளிவண லூரே. 4 |
வார் - நெடிய சடையினான்.
உறைவது - தங்குவது, அவளிவள்நல்லூரே.
இக்கோலம் ஏற உடைமை, இடுகாட்டில் இரவில் நின்று நடமாடுதற்கு
ஏற்றதன்றாயினும், "இன்ன தன்மையனென்று அறியொண்ணா இறைவன்"
ஆகலின், ஆயிற்றென்க. ஏற உடையர் - ஏறுடையர் என்றாயது.
"தொட்டனைத்தூறும்" என்ற திருக்குறளிற்போல, ஏறுடையர். வார்
சடையினான் - என வந்தது ஒருமை பன்மை மயக்கம்; பன்மை -
உயர்வுபற்றியது.
4.
பொ-ரை: பிணியும், இறப்பும், பிறப்பும் இல்லாதவர் என்று
உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும்
அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இன்னருள் புரிபவர்.
கிழிந்த தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன், பாம்பை
அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது
திருஅவளிவண்ணலூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பிணியும், இறப்பும் பிறப்பும் உடைய நமக்கு,
இவையில்லாதவனாகிய சிவபெருமான் தஞ்சமாவரென்று உலகத்தில் பாராட்டி
வணங்கும் அடியார்களின் (அவற்றிற்குக் காரணமான) பாவம் நீங்க
உடையவன் இனிய அருள்தந்து உறைவது (அவளிவணல்லூர்) "எல்லார்
பிறப்பும் இறப்புமியற் பாவலர்தஞ் சொல்லால் அறிந்தோநம் சோமேசர்-
இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகி வேவாழ்ந் திறந்தகதை
யுங்கேட் டிலேம்" -சோமேசர் முதுமொழி வெண்பா. எனவும்,
|