3683. |
குழலின்வரி வண்டுமுரன்
|
|
மெல்லியன
பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு
ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு
நோயுமிலராவர்
அழலுமழு வேந்துகையி னானுறைவ
தவளிவணலூரே. 5 |
"...மற்றத்தெய்வங்கள்
வேதனைப் படுமி றக்கும்
பிறக்கும்மேல் வினையும் செய்யும்"
(சித்தியார்
சுபக்கம். சூத்.2.25)
|
எனவும் வரும் பாடல்கள்
இங்கு அறியத்தகும்.
இவற்றையுடைய
பிறதேவர்களைப்பற்றிக் கரையேறுவோமென்பது
"குருடும் குருடும் குருட்டாட்டமாடிக், குருடும் குருடும் குழிவீழ்ந்தவாறே"
என்றபடியேயாம் என்க. பயந்து - பயன் பெறத்தந்து, துணியும் -
கிழித்தலையுடைய. தோலும், கோவணமும், உடையும், பாம்பு உடலில்
தொங்க அணியும் ஆபரணமும் ஆக (அவைதனக்கு அழகு செய்வனவாக
உடையவன்) அடியார்கள் பாவம் அற இன்னருள் பயந்து, தோல் முதலியவை
தனக்கு அழகு செய்வனவாக உடையவன் என வினை முடிபு செய்க.
இப்பாடலுக்குப் பொழிப்பு உரைக்கப்பட்டது. துணி-துணித்தல். முதனிலைத்
தொழிற்பெயர்.
5.
பொ-ரை: குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி
மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலைகட்டி,
சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி,
"இவரே முழுமுதற் கடவுள்" என்று தொழுது போற்றுவர். அத்தகைய
வழிபாட்டைச் செய்பவர்கட்கு, உள்ளத்தால் வரும் துயரும், உடலால் வரும்
நோயும் இல்லை. அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன்,
நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய்
வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அமரர்கூடி, குழலின் - புல்லாங்குழலின் ஓசைபோல, வண்டு
முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற, மெல்லியன - மெல்லியன
|