3685. |
கூடரவ
மொந்தைகுழல் யாழ்முழவி |
|
னோடுமிசை
செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து
பேரிடப மோடும்
காடரவ மாகுகனல் கொண்டிரவில்
நின்றுநட மாடி
ஆடரவ மார்த்தபெரு மானுறைவ
தவளிவண லூரே. 7 |
நடுங்கத் தம் மார்பில்
போர்த்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது
திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அமரர் - துஞ்சல் இலராய் - சோம்பலின்றி. நின்று தொழுது
ஏத்த அருள்செய்து. நஞ்சம் உண்டு, (அதனால்) மிடறு - கழுத்து. கரிது
ஆய - கரியது ஆகிய, வெளிது ஆகி - ஏனைய திருவுருவம் படிகம்போல
வெண்மையுடையது ஆகப்பெற்று (உடைய) ஒப்பற்ற. நம்பன் - சிவபெருமான்.
சதாசிவ மூர்த்தியின் திருவுருவம் படிகம் போன்றது ஆதலின், வெளியது
ஆய ஒரு நம்பன் என்றார். மஞ்சு - மேகம்; இங்கு வானத்தைக் குறித்தது,
உற - பொருந்த. நிமிர்ந்தமை - யானையுரிக்கும் அவசரம். மதவேழம் அஞ்ச
மஞ்சு உற நிமிர்ந்து (அதன்தோலை உரித்து) உமைநடுங்க. அகலத்தோடு -
மார்பில். அளாவி - சேர்த்துப் (போர்த்த). உரியான் - தோலையுடையவன்.
அஞ்ச(உரித்த) மதவேழ உரியான் என்க. போர்த்த. உரித்த, என ஒருசொல்
வருவித்துரைக்கப்பட்டது. அன்றி வினை முடிபு கொள்ளுமாறு இல்லை.
7.
பொ-ரை: மொந்தை, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள்
ஒலிக்க, எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு
போலப் பாய, பெரிய இடப வாகனத்தோடு, சுடுகாட்டில் ஓசையுடன் எரியும்
நருப்பையேந்தி இரவில் நடனமாடி, படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக்
கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும்
திருத்தலம் ஆகும்.
கு-ரை:
மொந்தை, குழல் யாழ் முதலிய வாத்தியங்கள் முழவினோடும்.
கூடு அரவம் - ஒத்துவரும் ஓசைகளாக. இசைசெய்ய - ஒலிக்க. பீடு அரவம்
ஆகு - பெரிய ஓசைதரும். படர் - பரவுகின்ற. அம்பு செய்து - தோள்வீசி
யாடும்போது சடையில் உள்ள கங்கைநீர்
|