உயிரினங்கள்
செயல்படுவதற்குப் பூமி மூலமாக இருப்பதால் பூமியை
மூலாதாரத் தலமாகக் கொண்டுள்ளனர். சுவாமி பெயர் திரு மூலட்டானர்
என்பது குறிக்கத் தக்கது.
அதேபோல்
உலகம் முழுவதும் இயங்குதற்கு ஆகாயம் ஆதாரமாக
நிற்றலால் ஆகாயமும் மூலாதாரம் எனப்படுகிறது. அதுபற்றியே சிதம்பரமும்
ஒருவகையில் மூலாதாரத் தலமாகப் பேசப்படுகிறது. சுவாமி திருமூலநாதர்
எனக் குறிக்கப் படுவதும் நினைக்கத் தக்கது. இதனால் சிதம்பரத் தலமும்,
நடராஜப் பெருமான் கூத்தும் உலக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
நடராஜப்பெருமான்
ஆட்டம் இல்லையேல் உலக இயக்கமே இல்லை.
அவருடைய ஆட்டமே உலகத்தை இயக்குகிறது. அணு அசைந்துகொண்டே
இருக்கிறது என்ற விஞ்ஞான நுட்பமும் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
மனித்தப்
பிறவியும் வேண்டுவதே, எப்போது?
இனித்தமுடைய
எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் ஆறறிவு
படைத்த மனிதப் பிறவியும் வேண்டுவதே, என்றார் அப்பர் பெருமான்.
கடவுள்
உணர்வும் வழிபாடும் கைவரப் பெறாவிட்டால் ஆறறிவு
படைத்த மனிதப் பிறவி தேவையில்லை; ஓரறிவு முதல் ஐயறிவு வரை
பெற்றுள்ள தாவரம், கறையான், வண்டு, விலங்கு முதலிய பிறவிகளாகவே
பிறந்திருக்கலாம் என்பதே அப்பர் திருவுள்ளம்.
சிதம்பர
ரகசியமே ஆகாயம். நடராஜப் பெருமானின் ஆட்டமே அணு
அசைவைப் புலப்படுத்தி உலகத்தை இயக்குகிறது. அவர் ஆட்டம் ஓய்ந்தால்
உலக இயக்கமே நின்றுவிடும்.
அதுபோல்
மனித இதயத்துள் (தகராகாசம்) சிறு ஆகாயம் உள்ளது.
அதில் உள்ள, துடிப்பே ஆட்டம். அது நின்றால் மனித இயக்கம் நின்று
விடும். இத்தத்துவத்தை உணர்ந்து வழிபட்டு உய்வோமாக.
|