பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை19

அந்தணர் பிரியாத சிற்றம்பலம்:

     இப்பதிகத்துள், தில்லைவாழ் அந்தணர்களை ‘அந்தணர் பிரியாத
சிற்றம்பலம்’ என்றும், ‘நல்லவர் பிரியாத சிற்றம்பலம்’ என்றும் குறித்துள்ளார்.
இடையீடின்றிப் பிரியாது வழிபடுவது, உடன் பெரும்பயன் தருவது.

     மேலும், ‘சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்’-‘தில்லையார்
தொழுதேத்து சிற்றம்பலம்’-என்றும் குறித்துள்ளார். வழிபாட்டிற்குச் ‘சீலம்’
மிக முக்கியமானது.

     மேலும், நீலத்தார் கரியமிடற்றார் நல்ல, நெற்றிமேலுற்ற கண்ணினார்,
பற்றுசூலத்தார், சுடலைப்பொடி நீறணிவார், சடையார், சீலத்தாராகத் தில்லை
வாழந்தணர்களைச் சிவனது உருவு கொண்ட சிவகணநாதர்களாகத்
தரிசித்தார் ஞானசம்பந்தர்

.      இதனைச் சேக்கிழார் பெருமானும் ஞானசம்பந்தர் தில்லைவாழ்
அந்தணர்களைச் சிவகண நாதர்களாகக் கண்ட காட்சியை, அவர்
திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார் என்று தெரிவிக்கின்றார்.
அப்பாடல் வருமாறு:

அண்டத் திறைவர் அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று மூவாயிர வர்களும்
தொண்டத் தகைமை கணநாதராய்த் தோன்றக்,
கண்டப் பரிசுபெரும் பாணர்க்கும் காட்டினார்.

                                 (தி.12-2068)

பொய்யிலா மறையோர்:

     அடுத்ததாக உள்ள பதிகம் பூந்தராய்ப் பதிகம் (சீகாழி). ‘பந்துசேர்
விரலாள்’ எனத் தொடங்குவது.

     முதல் பாடலில் மலைமாதொடும் ஆதிப்பிரான் எழுந்தருளியுள்ள
பூந்தராய்ப் பதியில், வானவர்கள் நிறைந்து வலஞ்செய்து, புத்தி பூர்வமாக
இறைஞ்சி, மாமலர் துவிப் போற்றுதலைக் குறிப்பிடுகின்றார். ‘பொய்யிலா
மறையோர் பயில் பூந்தராய்’ என அந்தணர்களைப் போற்றுகிறார்.

     ‘பொய்மொழியா மறையோர் என்றும், ‘மெய்மொழி