நான்மறையோர்
என்றும் முதல் திருமுறையில் ஞானசம்பந்தரும்,
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப், புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்
என்று நான்காந் திருமுறையில் அப்பரும் போற்றியுள்ளவை கருத்தில்
கொள்ளத் தக்கன.
சம்பந்தர்,
அப்பர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. அக்காலத்தில்தான்
சீன யாத்திரீகர் யுவான் சுவாங் என்பவர் இந்தியாவையும் தமிழ்நாட்டையும்
சுற்றிப் பார்த்து இங்குள்ள மக்கள் பொய் பேசாதவர்கள், வஞ்சகம், சூது
இல்லாத நல்லவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1300 ஆண்டுகளில் நாம்
எவ்வளவு தூரம் ஆன்மீகத்தில் வளர்ச்சியின்றிச் சரிந்துள்ளோம் என்பதும்,
அருணகிரிநாதர், இறைவன் பொய்யர் உள்ளத்து அணுகான் என்று
கூறியிருப்பதும், சிந்தனைக்குரியன.
அமைப்பு
முறை:
மூன்றாந்
திருமுறையில் 84 திருத்தலங்கள் 121 திருப்பதிகங்களால்
போற்றப் பெறுகின்றன. பொதுப்பதிகங்கள் நான்கினைச் சேர்த்து 125
திருப்பதிகங்கள் உள்ளன. காந்தார பஞ்சமத்தில் 23, கொல்லிப் பண்ணில்
18, கொல்லிக் கௌவாணத்தில் 1, கௌசிகத்தில் 12, பஞ்சமத்தில் 11,
சாதாரியில் 33, பழம் பஞ்சுரத்தில் 17, புறநீர்மையில் 6, அந்தாளிக்
குறிஞ்சியில் 2, ஆக ஒன்பது பண்களும், 125 பதிகங்களும் உள்ளன.
126ஆவது
பதிகம் பிற்சேர்க்கையாகிய திருவிடைவாய்ப் பதிகம்
ஆகும். இப்பதிகம் கல்வெட்டிலிருந்து கிடைத்துள்ளது. சென்னை
கல்வெட்டறிக்கை 8/1918இல் காணலாம். இப்பதிகம் மூன்றாம் திருமுறை
இறுதியில் இடம்பெற்றுள்ளது.
மூல
இலக்கியம்:
திருஞானசம்பந்தர்
இசைத்தமிழில் இயற்றமிழைக் குழைத்து வளம்
பெறும் வகையில் அரிய பலவிகற்பச் செய்யுட்களை அருளிச் செய்துள்ளார்.
அவை அவரது திருப்பதிகங்களில் மொழி மாற்று, மாலை மாற்று, வழிமொழி
மடக்கு, இயமகம், ஏகபாதம், இருக்குக்குறள், எழுகூற்றிருக்கை, ஈரடி,
ஈரடிமேல்வைப்பு, நாலடி, நாலடிமேல் வைப்பு, முடுகியலாகிய திருவிராகம்,
சக்கரமாற்று முதலிய பெயர்களில் உள்ளன.
விகற்பச்
செய்யுட்களுக்கு இலக்கணம் காண்போர்க்கு
|